பதவியிலிருந்து விலகியவர்களிடமிருந்து அரச சொத்துக்களை மீளப்பெற நடவடிக்கை 

பதவியிலிருந்து விலகியவர்களிடமிருந்து அரச சொத்துக்களை மீளப்பெற நடவடிக்கை 

பதவியில் இருந்து விலகிய அதிகாரிகள் தொடர்ந்தும் பயன்படுத்தும் அரச சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு இதற்கான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட அரச சொத்துக்களை சிலர் சட்ட விரோதமாக பயன்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply