தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய(12.08) தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை(14.08) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. 

பின்னர், வேட்புமனு கோரல் எதிர்வரும் 15ம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version