இலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளர் 

இலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளர் 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக, இங்கிலாந்து அணியின் முன்னாள் துப்பாட்ட வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

இயன் பெல் எதிர்வரும் 16ம் திகதி முதல் கடமைகளை பொறுப்பெற்கவுள்ளதுடன், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடையும் வரையில்   துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக செயற்படவுள்ளார். 

முன்னாள் துடுப்பாட்ட வீரரான இயன் பெல் இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் 7727 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 22 சத்தங்களையும் குவித்துள்ளார்.   

இங்கிலாந்து மைதானங்களில் விளையாடி சிறந்த அனுபவம் கொண்ட இயன் பெல்லின் அறிவுறுத்தல்கள் இலங்கை அணிக்கு வலு சேர்க்கும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இங்கிலாந்து, மான்செஸ்டரில் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version