ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு 

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு 

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளது.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளடதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் மாதம் 5ம் மற்றும் 6ம் திகதிகள் வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்க தவறியவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், தபால் மூல வாக்கு சீட்டுக்களை விநியோகிக்கும் மற்றும் தபால் திணைக்களத்திற்கு வழங்கும் செயற்பாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version