நிரோஷன் டிக்வெல்லவிற்கு கிரிக்கெட்டில் ஈடுபட தடை 

நிரோஷன் டிக்வெல்லவிற்கு கிரிக்கெட்டில் ஈடுபட தடை 

ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியமைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்லவிற்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உடன் அமுலுக்கு வரும் வகையில், காலவரையின்றி நிரோஷன் டிக்வெல்லவிற்கு அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடத்திற்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

இலங்கை விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன், உலக ஊக்கமருந்து தடுப்பு திட்டங்களுக்கு அமைவாக இவ்வறான ஊக்கமருந்து சோதனைகள் நடத்தப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version