‘அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’ – திஸ்ஸ MP

2022 பெப்ரவரிக்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி மாகாண சபைத் தேர்தலை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே, 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடாக நடைமுறைக்கு வந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (29/11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “சில சிறிய குறைபாடுகள் இருந்த போதிலும், பாராளுமன்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி 2022ல் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.

எனவே, 2022ஆம் ஆண்டை இரண்டு தேர்தல்கள் நடத்த வேண்டிய ஆண்டாகக் கருதுகிறோம். இதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி அடிமட்ட அளவில் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

தற்போது, ​​130 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தொகுதி அமைப்பாளர்களுக்கு அடிமட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் குழு மூலம் கொள்கை நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் நாங்கள் நாடு எதிர்நோக்கும் பல சவால்களுக்கு மத்தியில் அனைத்தையும் செய்கிறேன்.

கொவிட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்களை காப்பாற்றும் வேலைத்திட்டத்தை நாம் அரசாங்க தரப்பிலும் காணவில்லை. வாக்குறுதிகள் மக்களுக்கு நிறைவேற்றப்படவில்லை.

மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முழுப்பொறுப்பையும் ஏற்று 2022 ஆம் ஆண்டை முழு அர்ப்பணிப்புடன் கூடிய ஆண்டாக மாற்ற தயாராக உள்ளன.

மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் போது அரசாங்கம் தலையீடு செய்து மக்கள் சார் சலுகைகளை வழங்க வேண்டும். இந்த ஆட்சியில் இதை காணவில்லை. அத்துடன் மக்கள் சார்ந்தும் சிந்துக்கிறார்கள் இல்லை. அரசாங்கத்தினால் தனது பொருளாதாரக் கொள்கையை சரியாக கையாள முடியவில்லை.

பண்டங்களின் விலைகளில் பல்வேறு வகைகளில் ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது. மரக்கறிகளின் விலைகள் அதிகரித்த போது மக்கள் அநாதரவாகியுள்ளனர்.

வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நிதி அமைச்சர் தெரிவித்தது என்ன? தற்போது செய்வது என்ன? இனி விலைவாசியைக் கட்டுப்படுத்த மாட்டோம் என்று கூறுவது பிழையானது, ஏனெனில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்றால் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சேவைகளுக்கான விசேட ஆணையாளராக நியமித்தது ஏன் என்பதான கேள்வி எழுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

‘அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை' - திஸ்ஸ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version