7ஆவது முறையாக விருது வென்றார் மெஸ்ஸி

ஆர்ஜெண்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் விருதான Ballon d’Or ஐ 7ஆவது முறையாக வென்றுள்ளார்.

நேற்று (29/11) பாரிஸில் அந்த விருது நிகழ்ச்சி நடைபெற்றது.

கால்பந்து விளையாட்டில் மிகப்பெரும் விருதாகப் போற்றப்படும் Ballon d’Or விருதை மெஸ்ஸி, கடந்த 2009, 2010, 2011, 2012, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளார்.

இவ்வாண்டு ஆர்ஜெண்டினா அணி, கோபா அமெரிக்கா போட்டியில் முதல்முறையாகக் கிண்ணம் வெல்ல மெஸ்ஸி பங்களித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு Ballon d’Or விருதை வென்றபோது இதற்குப் பிறகு இந்த விருதை வெல்வது கடினம் என்று நினைத்ததாக மெஸ்ஸி கூறியிருந்தார்.

அத்துடன் இன்னும் எத்தனை ஆண்டு விளையாடுவேன் என்று தெரியாது, ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்று மெஸ்ஸி தெரிவித்தார்.

பெண்களில் சிறந்த கால்பந்து விளையாட்டாளராக ஸ்பெயினின் அலெக்ஸியா புட்டெல்லா (Alexia Putella) Ballon d’Or-விருதுக்குத் தேர்தெடுக்கப்பட்டார்.

7ஆவது முறையாக விருது வென்றார் மெஸ்ஸி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version