சுகாதார அதிகாரிகளால் புதிதாக கண்டறியப்பட்ட கொவிட்-19 திரிபான ஒமிக்ரொனை, நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மட்டுமே முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நேற்று (29/11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “புதிய திரிபு எந்த நேரத்திலும் நாட்டிற்குள் நுழையலாம் என்பதோடு, இதுபோன்ற சூழ்நிலைகளில் COVID நிலைமையை கட்டுபடுத்த சுகாதார அமைச்சு அனைத்துத் தயார் நிலையிலும் உள்ளது.
நாட்டிற்குள் உள்நுழையும் கொவிட் நோயாளிகளின் சாத்தியக் கூறுகளைத் தடுக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதன் மூலம் புதிய திரிபின் நுழைவை தாமதப்படுத்த மட்டுமே செய்யலாம்.
சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது, புதிய திரிபை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் அவற்றை கடைபிடிக்க தவற கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
