பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் லோவர் தோட்டத்தில் தீப்பரவல் காரணமாக
லயன் குடியிருப்பிலுள்ள 25 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து நேற்று (17.08) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக 86 பேர் நிர்கதிக்குள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஆலய மண்டபம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.