சஜித் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் 

சஜித் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் 

2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(18.09) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்காக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம்  திகதி  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது.  அப்போது கலாச்சார அலுவல்கள் அமைச்சராக செயல்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கத்தோலிக்க சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் புனித அந்தோனியார் தேவஸ்தானத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த தாக்குதலின் போது   உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளானவர்களின் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக சுவசக்தி மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுத்து, இந்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட குடும்ப  உறுப்பினர்களை பொருளாதார கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியில் கட்டியெழுப்புவதற்கு  பாரிய நடவடிக்கைகளை எதிர்க்கட்சித்  தலைவர் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து தமது எதிர்கால அரசியலுக்காக நடவடிக்கைகளுக்காக தேவாலயத்தின் அருட் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் அங்கே வருகை தந்திருந்த பக்தர்களுடன் சிநேகபூர்வ  கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version