சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

களுகங்கை, மகுரு கங்கை, ஜின் கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குடா கங்கையில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஆறுகளுக்கு அருகிலுள்ள தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version