
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொரளை ஆசனத்தின் இணை அமைப்பாளருமான ஜயந்த டி சில்வா தனது 78ஆவது வயதில் காலமானார்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை (21.08) காலமானார்.
இவர் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும் மூன்று தசாப்தங்களாக பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.