தேர்தல் பிரச்சாரங்களினால் போக்குவரத்திற்கு இடையூறில்லை 

தேர்தல் பிரச்சாரங்களினால் போக்குவரத்திற்கு இடையூறில்லை 

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக பஸ்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பஸ்களுக்கான பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் தேர்தல் கூட்டங்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார். 

தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடையும் வரை பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் பஸ்கள் வழங்கப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version