ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் அடுத்த மாதம் 03ம் திகதி ஆரம்பமாகும் எனப் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 08ம் திகதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை வாக்குச் சீட்டு விநியோகம் இடம்பெறும் விசேட தினம் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் வீட்டிலிருந்து வாக்குச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வீடுகளுக்குச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 14ம் திகதியுடன் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் தினம் வரை சாதாரண நேரங்களில் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,280 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்களாவர்.