மன்னாரில் முதல் முறையாக இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம்

மன்னாரில் முதல் முறையாக இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம்

பொருளாதார நெருக்கடியில் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை மன்னார் நகரில் முதல் முறையாக இன்று(22.08) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
 
மன்னார் நகரில் 20 வருடங்களுக்கு மேலாக இரண்டு சக்கர மோட்டார் வாகன விற்பனைச் சேவையை வழங்கி வரும் மேசியா நிறுவனமானது மக்களின் போக்குவரத்துக்காக தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு சர்வதேச தரத்தைக் கொண்ட யடியா(YADEA) உற்பத்தி நிறுவனத்தின் இலத்திரனியல் மோட்டார் சைக்கிளை மன்னாரில் இன்று(22.08) அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வில் கொழும்பிலிருந்து வருகை தந்த யடியாவின்(YADEA ) இலங்கைக்கான விற்பனை முகாமையாளர் மற்றும் வடக்கு பிராந்திய முகாமையாளர், உட்பட மேசியா நிறுவனத்தின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினிநிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version