யாழ்ப்பாணத்தில் இன்று (30/11) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், தமக்கு இழப்பீடு வேண்டாம், மரண சான்றிதழ் வேண்டாம், சர்வதேசத்திடம் இருந்து நீதி மட்டுமே வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
