அனுரவின் அரசாங்கத்தில் வரிப்பணத்தில் வெளிப்படைத்தன்மை  

அனுரவின் அரசாங்கத்தில் வரிப்பணத்தில் வெளிப்படைத்தன்மை  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் வரி வசூலிக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

வரி செலுத்தும் நபர்களுக்கு, செலுத்தப்படும் வரிகள் மற்றும் குறித்த வரிப்பணம் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில்  ஒவ்வொரு வருட இறுதியிலும் குறுஞ்செய்தியினூடாக(SMS) அறிவிக்கப்படும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என பலாங்கொடையில் இன்று(24.08) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தப்படும் போது மக்கள் அதன் பிரதி பலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply