தெதுரு ஓயாவில் நீராட சென்ற தாயும் 02 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 09 வயது மகன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
போகமுவ பிரதேசத்திலிருந்து இன்று (25.08) பகல் தெதுரு ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற இவர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 மற்றும் 5 வயதுடைய 2 மகன்களுமே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தாயையும் மற்றைய மகனையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.