எல்பிட்டியவில் பிரதேச சபை தேர்தல்

எல்பிட்டியவில் பிரதேச சபை தேர்தல்

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று(26.08) வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் படி எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரையும், உப தவிசாளரையும் சபைக்கான உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்குரிய தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை இன்று(26.08) முதல் செப்டெம்பர் 11ம் திகதி நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

வேட்புமனுக்களை ஏற்கும் செயற்பாடு காலி மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் செப்டெம்பர் 09ம் திகதி முதல் செப்டெம்பர் 12ம் திகதி நண்பகல் 12 மணி வரை இடம்பெறும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply