தேர்தலினால் பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரிப்பு

தேர்தலினால் பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் காரணமாகப் பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பட்டாசுகளுக்கு(mal vedi) அதிக கேள்வி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பட்டாசுகளுக்கான தேவை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தேவையான மூலப்பொருட்களைக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடிந்தமையால், நிலவும் கேள்விக்கு ஏற்றவாறு பட்டாசு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply