ஜனாதிபதித் தேர்தல்: இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தல்: இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.

வாக்காளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரு தலைவர் நாட்டுக்குத் தேவை என  இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும், ஊழல்வாதிகளை ஆதரிக்கும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க, மக்கள் தங்களின் பெறுமதியான வாக்குகளைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் நான்கு பிரதான மதங்களின் விழுமியங்களின் அடிப்படையில் ஜனநாயக மற்றும் தார்மீக கோட்பாடுகளுக்கு இணங்க நாட்டை ஆட்சி செய்யும் தலைவரைத் தேர்ந்தெடுக்க அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version