தேசிய சூப்பர் லீக் தொடர்: கண்டி, யாழ்ப்பாணம் அணிகளுக்கு வெற்றி

தேசிய சூப்பர் லீக் தொடர்: கண்டி, யாழ்ப்பாணம் அணிகளுக்கு வெற்றி

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும் தேசிய சூப்பர் லீக் தொடர் இன்று(27.08) ஆரம்பமாகியது. தொடரின் முதலாவது போட்டியில் கண்டி மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கண்டி அணி சார்பில் அஹான் விக்ரமசிங்க 112(134) ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 43(37) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

காலி அணி சார்பில் பந்து வீச்சில் தனஞ்சய லக்‌ஷான் 4 விக்கெட்டுக்களையும், கருக்க சன்கித், முதித்த லக்‌ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

260 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. காலி அணி சார்பில் யஷோதா லங்க 63(45) ஓட்டங்களையும், ரவிந்து ரசன்த 56(80) ஓட்டங்களையும், சோஹான் டி சில்வா 44(52) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி அணி சார்பில் பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, காலி அணி இந்த போட்டியில் 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.

(புகைப்படங்கள்: ரஞ்சித்குமார் – புகைப்பட செய்தியாளர்)  

யாழ்ப்பாணம் எதிர் கொழும்பு

தேசிய சூப்பர் லீக் தொடரின் மற்றுமொரு போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. ஹம்பாந்தோட்டையில் இன்று(27.08) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கொழும்பு அணி சார்பில் விஷாத் ரன்திக 66(56) ஓட்டங்களையும், தசுன் ஷானக 49(60) ஓட்டங்களையும், அஷேன் பண்டார 44(58) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாணம் அணி சார்பில் இஷித விஜேசுந்தர 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

270 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 48.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. யாழ்ப்பாணம் அணி சார்பில் சந்துன் வீரக்கொடி 73(66) ஓட்டங்களையும், ரோன் சந்திரகுப்த 63(96) ஓட்டங்களையும், ஜனித் லியனகே 44(48) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு அணி சார்பில் பந்துவீச்சில் டிலும் சுதீர 3 விக்கெட்டுக்களையும், பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, யாழ்ப்பாணம் அணி இந்த போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version