ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சமுர்த்தி வேலைத்திட்டத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாவலப்பிட்டியில் இடம்பெற்ற பேரணியின் போதே அவர் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் வறுமையை ஒழிப்பதில் முக்கியமானதாக இருக்கும் திட்டத்தை பற்றி சில தலைவர்கள் கொண்ட எதிர்மறையான கருத்தையும் நாமல் ராஜபக்ச இதன்போது விமர்சித்தார்.
சமுர்த்தி இயக்கம் தோல்வியடைந்துவிட்டதாக சில தலைவர்கள் கருதுகின்ற போதிலும்
அந்த திட்டமே மக்களை வறுமையிலிருந்து காப்பாற்றியது என்றும் அவர் கூறினார்.
பயனாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உரிய வேலைவாய்ப்பைக் கண்டறிந்து அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த நாமல் ராஜபக்ச சமூர்த்தி திட்டத்தை வலுப்படுத்துவதைத் தாண்டி, சமுர்த்தி பெறுபவர்களை தொழில்முயற்சியாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.