மன்னார் உயிலங்குளம் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்

மன்னார் உயிலங்குளம் வீதியில் விபத்து - மூவர் படுகாயம்

மன்னார், உயிலங்குளம் பகுதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார், மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் இன்று(27.08) மாலை 4 மணியளவில், நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில், மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் மாந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version