அரசாங்கத்துடன் ரணில் இணைகிறார்?

ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் கூட்டுறவிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல்வாதிகளின் பங்குபற்றுதலுடன் பலதரப்பட்ட ஆரம்ப கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும் எனவும் அறியமுடிகிறது.

இந்த அரசியல் கூட்டணியை நிறுவுவதில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர தூதுக்குழுவொன்று நேரடியாக ஈடுபட்டுள்ளது என்றும் நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள நிதி நெருக்கடியைத் தீர்ப்பதிலும் பலவீனமான வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதிலும் ரணில் விக்ரமசிங்கவால் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்கள் நம்புவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் ரணில் இணைகிறார்?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version