
அரச ஊழியர்களின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவு விகிதாசாரத்திற்கேற்ப ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் நேற்று (30.08) கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரச ஊழியர்களின் சம்பளம் 25 000 ரூபாவாக உயர்த்தப்படும் என கூறுவது அப்பட்டமான பொய். ஜனாதிபதி நினைத்திருந்தால் இப்போதே சம்பள உயர்வை வழங்கியிருக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்னர் சம்பள உயர்வைக் கோரி அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது நிதி இல்லை எனக் கூறினார்.
உறுதியளித்தபடி சம்பளத்தை உயர்த்துவதற்கு ஜனவரியில் மாத்திரம் எங்கிருந்து நிதி கிடைக்கும்? ஆகவே இது பொய்யான கருத்து.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவு விகிதாசாரத்திற்கேற்ப ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை உயர்த்தப்படும்.
இது தேர்தல் நேரத்திலோ அல்லது ஊழியர்கள் வேலைநிறுத்தத்தின் போதே வழங்கப்படும் சம்பள உயர்வல்ல. நாங்கள் கூறுவது தொடர்ச்சியாக வழங்கும் சம்பள உயர்வையே” என அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.