
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் தன்னிடம் இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் நேற்று (31.08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாம் உருவாக்கும் கொள்கைகள் அரசியல் இலக்கு கொண்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதல்ல,வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதேயாகும்.
எனவே நாம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் நாட்டிற்கு பாதகமான விடயங்களோ சட்டமோ இல்லை, இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் வேலைத்திட்டம் எதுவுமில்லை எம்மிடம் இல்லை.
இந்த நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்திலிருந்து மக்களின் நலனுக்காகக் கட்டமைக்கப்பட்ட கொள்கைகள் மாத்திரமே உள்ளன என்பதையும் நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.