லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் செப்டம்பர் மாதம் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் மக்களின் நலன் கருதி விலைத்திருத்தம்
மேற்கொள்ளாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.