தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு  

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு  

காலி, கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையக் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளமையால், குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version