
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று(02.09) தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன.
பின்னர் வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தினரால், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை விநியோகத்தை நாளை(03.09) முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.