தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று(03.09) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டினை அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்ட நிலையில் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் பொது அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version