தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(04.09) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றைய தினம்(04.09) மாவட்ட தேர்தல் செயலகம்,  அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு, பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் முதற்கட்டமாக வாக்களிக்கவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களும் தபால் மூலமாக வாக்களிக்கவுள்ளனர்.

04ஆம், 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version