லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் இந்த மாதம் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை,மாதாந்த விலை சூத்திரத்தின்படி செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தினார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் முன்னதாக இறக்குமதி செய்யப்பட்டதன் பயனை மக்களுக்கு வழங்க தீர்மானித்ததாக அவர் கூறினார்.

இதற்கமைய ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளும் விலைக்கே இந்த மாதத்திலும் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளலாம்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version