இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால்ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்கஅனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான்பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபாலகம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.