மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்ததினம் இன்றாகும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட்ட பல மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சிறந்த நடிகை இவராவார்.
மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தமிழ் சினிமா இரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் நடிகை சில்க் ஸ்மிதா என்றால் அது மிகையாகாது.
பேரழகு என்ற சொற்றொடர் கனகச்சிதமாக பொருந்துவது சில்க் ஸ்மிதா என்ற நடிகைக்குத்தான். தமிழ் திரை உலகில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகும் இரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்களும் கவலைகளும் நிரம்பிய ஒரு தொடராகும்.
