எரிவாயு சிலிண்டர் தொடர்பில் புதிய நடைமுறை

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்து அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்நடைமுறை இன்று (02/12) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தினால் இன்று முதல் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர் தொடர்பில் புதிய நடைமுறை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version