ஜனாதிபதி தேர்தல்: பாடசாலைகளுக்கு எப்பொழுது விடுமுறை?

ஜனாதிபதி தேர்தல்: பாடசாலைகளுக்கு எப்பொழுது விடுமுறை?

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தயார்ப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version