மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள்

மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள்

உலக சுகாதார நிறுவனத்தினால் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் நேற்று(07.09) தேசிய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட நோயாளர் பாதுகாப்பு தின நிகழ்வில் மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.  

இதன் போது, நோயாளர்கள்,பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள் கிடைத்துள்ளன.

இருநூறுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் வட மாகாணத்திலிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாத்திரமே இந்த சிறப்பு விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி வைத்தியர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version