சஜித்திற்காக பிரச்சாரத்தில் இறங்கிய மனைவி

சஜித்திற்காக பிரச்சாரத்தில் இறங்கிய மனைவி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜலனி பிரேமதாச மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் முசலி பொற்கேணி பிரதேசத்திற்கு நேற்றைய தினம் (12.09) வருகை தந்த ஜலனி பிரேமதாச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் மன்னார் அளக்கட்டு பொற்கேணியில் இடம்பெற்ற பெண்களுக்கான கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகள் ,பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version