கொக்கோ, கராம்பு, மிளகு தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு நிர்ணயம்

கொக்கோ, கராம்பு, மிளகு தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு நிர்ணயம்

கொக்கோ, கராம்பு, மிளகு உற்பத்தி சார் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவாக 1,856 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

கொக்கோ, கராம்பு, மிளகு தொழிற்துறையில் ஈடுபடுவோருக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version