குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டோம் – ஜனாதிபதி பெருமிதம்

குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டோம் - ஜனாதிபதி பெருமிதம்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பதுளையில் நேற்று (16.09) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“இந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்தால் எமது வெற்றி உறுதியாகிறது. இந்த வாரம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறீர்கள். நாம் வளமான, நிலையான நல்ல வாழ்க்கை வாழப் போகிறோமா அல்லது வரிசை யுகத்திற்குத் திரும்பப்போகிறோமா என்பதை இது தீர்மானிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, ​​ பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 05 வருடங்கள் ஆகும். ஆனால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டோம். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியில் அதன் வித்தியாசத்தை மக்கள் காணலாம்.

தப்பித்து ஓடிய தலைவர்களை நம்ப முடியாது. எனவே செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியவற்றின் தொழிற்சங்க தலைவர்கள் சிலரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version