
உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மீதான பெறுமதி சேர் வரியை முழுமையாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அக்குரஸ்ஸவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கும் தனது திட்டங்களையும் அவர் இதன்போது விளக்கினார். மேலும் வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா முதல் 17,500 ரூபா வரை நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்த அவர், வளங்களைப் பிரிப்பதற்காக அவர்கள் அரசாங்கங்களை உருவாக்குகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.
ஆனால் தாம் அத்தகைய நடைமுறைகளை கைவிட்டு அரசியலை ஒரு பொது சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுமென உறுதியளித்தார்.