
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராகச் செயற்பட்ட சம்பத் கமகே என்பவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம – பனாகொட சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் வந்த நபரொருவர் தாக்கியதன் காரணமாகப் பலத்த காயமடைந்த நபர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்தவர் என்றும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்த நபரின் திருமணத்துக்குப் புறம்பான உறவு குறித்த விடயங்களும் வெளியாகியுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.