மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் மூவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் மூவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அந்த கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக அவர்களது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் அகில இலங்கை நிறைவேற்றுக் குழு, செயற்குழு, அரசியல் குழு உறுப்புரிமை மற்றும் கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவி போன்றன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version