தரம் 05 புலமைப்பரிசில் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

தரம் 05 புலமைப்பரிசில் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்து சில கேள்விகள் கசிந்தமை தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை நிறைவடையும் வரை மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை அறிக்கைகளைக் கருத்திற்கொண்டு, இறுதித் தீர்மானம் எடுக்கும் எனத் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிந்துள்ளமை விசாரணைகளின் மூலம் நிரூபணமானால் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மாத்திரமே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் செயற்படுமாறு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை முடிவுகளின் அடிப்படையில், குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 15ம் திகதி நடைபெற்றது. ஆனால் பரீட்சைக்கு சில நாட்களுக்கு முன்னர் வினாத்தாளிலிருந்த வினாக்களுக்கு ஒத்த வினாக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version