இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இன்று (21.09) நடைபெறவுள்ளது.
2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் கடமையில் ஈடுபடும் 150,000 அரச அதிகாரிகள், நாடு முழுவதிலும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளுடன் நேற்று (20.09) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
தேர்தலின் போது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் வாக்களிப்பு நிலையங்களைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.