விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் விரைவில் ஆரம்பம்

விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் விரைவில் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில், இரண்டாவது விருப்பத்தேர்வுகளை எண்ணவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் இறுதி முடிவுகள் இன்று(22.09) பிற்பகல் அல்லது நாளை(23.09) முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

விருப்பு வாக்கு தேர்வுக்காக அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர்.

நாட்டின் தேர்தல் சட்டங்களின்படி, வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றி பெற மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்படவுள்ளது.

எந்தவொரு வேட்பாளரும் இந்த பெரும்பான்மையைப் பெறாத நிலையில்  முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர ஏனைய அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டிலிருந்து இரண்டாவது விருப்பத்தேர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முதல் இரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும்.

இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயல்முறையைக் கையாள்வதில்
முழுமையாகப் பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version