வாக்கும் எண்ணும் பணிகளில் முறைகேடு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

வாக்கும் எண்ணும் பணிகளில் முறைகேடு - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் சட்டத்துக்கு முரணாக சில நடவடிக்ககைள் நடைபெற்றுள்ளதாகவும், அத்தோடு வாக்கு எண்ணும் பணிகளின் போது சில அதிகாரிகள் முறைகேடாக நடந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

50 சதவீத வாக்குகள் எந்தவொரு வேட்பாளரும் பெறாவிட்டால், விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் முதலிரு இடங்களை பெற்ற வேட்பாளர்கள் அல்லது கட்சிகளின் அங்கத்துவர்களிடம் இது தொடர்பில் அறிவித்து அவர்களது அனுமதியோடு ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை எனவும், அதற்கு முன்னதாக விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும், இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்றே தாம் அறிந்து கொண்டதாகவும், இது பிழை என சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அதனை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பிழையான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும், தமது கட்சியின் பிரதிநிதிகள் இல்லாமல் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு இரண்டாவது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் போது தமது கட்சியின் பிரதிநிதிகள் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமடன்ர உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் திலங்க சுமதிபால, சுஜீவ சேனசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version