புலமைப்பரிசில் சர்ச்சை: முக்கிய அதிகாரிக்கு விளக்கமறியல்

புலமைப்பரிசில் சர்ச்சை: முக்கிய அதிகாரிக்கு விளக்கமறியல்

2024ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்த சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய கல்வி நிருவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் நேற்று(23.09) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஒக்டோபர் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

57 வயதுடைய சந்தேக நபர் பரீட்சை வினாத்தாளிலிருந்த சில கேள்விகளைப் பரீட்சைக்கு முன்னர் வெளியிட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version