பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட மாகாண ஆளுநர் கோரிக்கை

பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட மாகாண ஆளுநர் கோரிக்கை

வடமாகாண முன்னாள் ஆளுநர் தொடர்பில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில்
மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (25.09) பதவி விலகினார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்பட்ட நிலையில்
பி.எஸ்.எம். சார்ள்ஸின் புகைப்படத்தை முன்னிலைப்படுத்தி, அவரது பதவி விலகல் செய்தி இறுதியாக பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் ஆளுநர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார் என்ற தகவல் மாத்திரமே பி.எஸ்.எம். சார்ள்ஸூடன் தொடர்புடையது.

எனினும், முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களின் தகவல்கள் தெளிவாகவும், உண்மையானதாகவும் பகிரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும் போது, செய்திக்கு பொருத்தமான
புகைப்படங்களை பகிர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version